நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அமித்ஷா போன்றவர்களுக்கு  நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி 

திருவண்ணாமலை:

இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்ற ஒரே கட்சி திமுக தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது தமிழ்நாடு மட்டும் தான். அதனால் தான் அமித்ஷா போன்றவர்களுக்கு எல்லாம் நம்மீது எரிச்சல் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

அண்மையில் அமித்ஷா பேசும் போது, பிஹாரில் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்று கூறுகிறார்.

அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல, உங்கள் படையையே கூட்டி வந்தாலும் உங்களால் இங்கு எதுவும் நடக்காது. இது தமிழ்நாடு. என்னுடைய கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே. அன்போடு வந்தால் அரவணைப்போம். 

ஆணவத்தோடு வந்தால் அடிபணியமாட்டோம் எதிர்த்து நிற்போம். திராடவிட மாடல் அரசின் சாதனைகளை புத்தகமாக அச்சிடும் அளவிற்கு ஏராளமானவற்றை செய்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். இதனை எல்லாம் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் நெருங்கி வந்துவிட்டது, மக்களிடம் கூறுங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அதிமுகவினர், உத்தமர் போன்று வந்து ஓட்டு கேட்பார்கள். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்ற பாஜகவினர் பொய்பரப்புரை செய்வார்கள். 2026 தேர்தலில் மக்கள் முன் இருக்கக் கூடிய கேள்வி, இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா?

இல்லை, பின்னோக்கி இழுக்க முயற்சிப்பவர்களுக்கு அடிபணியபோகிறோமா? அந்த கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகின்ற விடை தான். திராவிட மாடல் ஆட்சி 2.0. அதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திமுகவின் எதிர்காலத்தில் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. நீங்கள் தான் திமுகவின் 2.0 வின் அடித்தளமாக இருக்க வேண்டும். அந்த வெற்றிக்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset