நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

UNITED ECONOMIC FORUM - ஐக்கிய பொருளாதார பேரவையின் வர்த்தக மாநாடு

சென்னை:

UNITED ECONOMIC FORUM எனும்
ஐக்கிய பொருளாதார பேரவை நடத்துகிற வர்த்தக மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் 12.12.2025 வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

தமிழ்நாடு வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு T.R.B. ராஜா மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டு ஏற்பாடுகளை பேரவையின் தலைவர் BSA. அஹ்மது புகாரியும் அதன் நிர்வாகக் குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

200 க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவையாக அமைந்திருந்தன. 

காலஞ்சென்ற சமுதாயப் புரவலர், பெருவள்ளல் அல்ஹாஜ் B. S.  அப்துல் ரஹ்மான் அவர்கள் உருவாக்கிய இப்பேரவையை அதன் சிறப்பம்சம் கொஞ்சமும் குறையாமல் வழிநடத்திச் செல்லும் நிறுவனரின் அன்புப் புதல்வர் அஹ்மது புகாரி அவர்களின் இடையராத ஆர்வமும், உழைப்பும் மிகுந்த பாராட்டுக்குரியவை.

மலேசியாவில் இருந்து டத்தோ வீரா ஷாகுல் ஹமீது தலைமையில் வர்த்தகக் குழு இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset