நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்: எச்சரிக்கை ஒலி 10 முறை ஒலித்தது

ஷாஆலம்:

ஷாஆலம் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

அப்பகுதியில் வெள்ள எச்சரிக்கை ஒலி 10 முறை ஒலித்ததுள்ளது.

வெள்ளத் தகவல் இணைய பக்கத்தின் அடிப்படையில், 

ஸ்ரீ மூடா நிலையத்தில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட 4.83 மீட்டர் உயரத்தில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டது.

இதனால்  குடியிருப்பாளர்கள் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வெளியே எடுத்துச் செல்வதோடு கூடுதலாக தங்கள் வீடுகளின் மேல் தளங்களுக்கு தங்கள் உடைமைகளை கொண்டு சென்றனர்.

 அப்பகுதியைச் சுற்றி நெரிசலையும் ஏற்படுத்தியது.

குறிப்பாக பல பகுதிகளில் வெள்ள தண்ணீர் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset