
செய்திகள் மலேசியா
சட்டவிரோத நிலத்தில் உள்ள ஆலயங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை: டத்தோ சிவக்குமார் கண்டனம்
மாரான்:
நாட்டில் சட்டவிரோத நிலத்தில் உள்ள ஆலயங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமையும் தகுதியும் இல்லை.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை எச்சரித்தார்.
மலேசிய இந்து சங்கம் ஆலயங்களுடனான ஓர் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது.
இந்து சங்கத்தின் இந்த முயற்சியை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
அதே வேளையில் அச்சங்கத்துடன் இணைந்து செயல்படவும் மஹிமா தயாராக உள்ளது.
ஆனால் அக்கூட்டத்தில் சட்டவிரோத நிலத்தில் உள்ள ஆலயங்கள் என்று இந்து சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று சமூக ஊடகங்களிலும் தானா ஹராம் என்று கூறி வருகின்றனர்.
அவர்களின் இச்செயல் கண்டனத்துக்குரியது. இதை நான் முழுமையாக எதிர்க்கிறேன்.
காரணம் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த நமது முன்னோர்களை தோட்டங்களில் ஆலயங்களை கட்டினர்.
அதே வேளையில் காட்டுப் பகுதிகளில் காவல் தெய்வங்களை வைத்து வழிப்பட்டனர்.
தர்போது காடுகள் அழிக்கப்பட்டதால் ஆலயங்கள் வெளியே தெரிகின்றன.
ஆக இவ்வாலங்களை எப்படி சட்டவிரோத நிலத்தில் உள்ள ஆலயங்கள் என்று கூற முடியும்.
மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆலயங்களுக்கு எவ்வாறு தீர்வை வழங்க வேண்டும் என்பதை நாம் ஆராய வேண்டும்.
அதை விடுத்து ஆலயங்களை தவறாக சித்தரிப்பது தவறு என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm