
செய்திகள் மலேசியா
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர விழா; 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்: ராமன்
மாரான்:
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத் தலைவர் ராமன் இதனை கூறினார்.
நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.
அவ்வகையில் இவ்வாண்டுக்கான பங்குனி உத்திர விழா ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.
குறிப்பாக நாளையும் நாளை மறுநாளும் இன்னும் அதிகமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமான பக்தர்கள் காவடி, பால்குடம், தொட்டில் காவடி, கரும்பு காவடிகளை ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இவ்வாண்டு பங்குனி உத்திர விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்று ராமன் கூறினார்.
இதனிடையே மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திர விழாவில் முதல் முறையாக கலந்து கொண்டேன்.
இவ்விழாவை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகத்திற்குவாழ்த்துகள் என்று மஹிமா தலைவரும் மஇகா பொருளாளருமான டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm