நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள்: கிரி சக்தி ஞானேந்திரா ஆசிரமமும் கோல காரிங், தேவி ஸ்ரீ கருமாரியம்மான் ஆலயமும் இணைந்து அனுப்புகிறது

ரவாங்:

மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை கிரி சக்தி ஞானேந்திரா ஆசிரமமும் ரவாங் கோல காரிங், தேவி ஸ்ரீ கருமாரியம்மான் ஆலயமும் இணைந்து அனுப்புகிறது.

ஆலய குருக்கள் சிவசிஸ்ரீ கே.கே.எம். கிருஷ்ணமூர்த்தி குருக்கள் இதனை கூறினார்.

மியான்மாரை தாக்கிய நிலநடுக்கம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்ததனர். அதே வேளையில் பல கட்டிடங்களும் சரிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் உதவிப் பொருட்களை சேகரிக்கும் முயற்சிகள் தொடங்கியது.

இப்போது 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை சேகரித்து விட்டோம்.

மியான்மா தூதரகத்தின் முதன்மை செயலாளர் உட்பட தூதரக அதிகாரிகள் இன்று அப்பொருட்களை பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பொருட்கள் அடுத்த வாரம் மியான்மாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கிருஷ்ணமூர்த்தி குருக்கள் கூறினார்.

ஆலய செயலாளர் எம்.விவேகானந்தன் தூதரக அதிகாரிகளுக்கு உரிய விளக்கத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset