
செய்திகள் மலேசியா
பதவிக்காலம் நீட்டிப்பது குறித்த முடிவை அரசாங்கத்திடம் விட்டுவிடுகிறேன்: அசாம் பாக்கி
கோத்தா கினாபாலு:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின், எம்ஏசிசியின் தலைமை ஆணையராகத் தனது பதவிக்காலம் நீட்டிப்பது குறித்த முடிவை அரசாங்கத்திடம் விட்டுவிடுவதாக டான்ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
டான்ஶ்ரீ அசாம் பாக்கியின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது.
ஆனால் அவரது பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை.
அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவையும் தாம் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 5 இன் கீழ் பிரதமர் ஆலோசனையின் பேரில் பேரரசர் தன்னை இப்பதவியில் செயல்பட நியமித்தார்,
ஓர் அரசாங்க அதிகாரியாகத் தாம் உத்தரவுகளைப் பின்பற்றுவதாக அவர் மேலும் கூறினார்.
2020-ஆம் ஆண்டு எம்ஏசிசியின் தலைமை ஆணையராகத் அசாம் நியமிக்கப்பட்டார்.
எம்ஏசிசியின் தலைமை ஆணையராகத் அவரது பதவிக்காலத்தில் பல உயர்மட்ட விசாரணைகள் நடந்துள்ளன,
மேலும் ஊழலைக் கையாள்வதில் ஆணையத்தின் பங்கில் பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm