
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத் தேர்தல்; ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் பொறுப்புகளை தேசிய முன்னணி வேட்பாளர் ராஜினாமா செய்து விட்டார்
தாப்பா:
ஆயிர் கூனிங் இடைத் தேர்தலை முன்னிட்டு ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் பொறுப்புகளை தேசிய முன்னணி வேட்பாளர் ராஜினாமா செய்து விட்டார்.
பேரா மந்திரி புசாரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாரணி முகமது இதனை தெரிவித்தார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் முகமது யூஸ்ரி பக்கீர் போட்டியிடுகிறார்.
இதனால் அவர் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் இஸ்லாமிய, ஒழுக்கக் கல்வித் துறைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் முகமது யுஸ்ரி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
மேலும் பொது சேவைத் துறையின் வெளியீட்டு கடிதத்திற்காக காத்திருக்கிறார்.
இன்று இங்குள்ள தாப்பா அறிவியல் மேல்நிலைப் பள்ளியில் பேரா அறக்கட்டளை ஏற்பாடு செய்த பூர்வக்குடி மாணவர்களுக்கான பெற்றோர் கருத்தரங்கை தலைமை தாங்கி நடத்திய பின்னர் சந்தித்தபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm