நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலையில் துப்பாக்கியால் சுட்டு காயமடைந்த போலிஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

ஜார்ஜ்டவுன்:

தலையில் துப்பாக்கியால் சுட்டு காயமடைந்த போலிஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியிடம் போலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

பினாங்கு மாநில போலிஸ்  டத்தோ ஹம்சா அகமத் இதனை கூறினார்.

தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள ஒரு போலிஸ் அதிகாரி, தற்போது பினாங்கு மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை அந்த உறுப்பினருக்கு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை.  இன்னும் ஒரு சிறப்பு மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்டவரின் முன்னாள் மனைவியின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவருக்கு கடன் பிரச்சினைகள் அல்லது குடும்ப பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்படுவது குறித்து, அது இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset