
செய்திகள் மலேசியா
எரிவாயு குழாய் தீ விபத்து சம்பவம்; 190 வீடுகளில் மக்கள் குடியேறினர்: போலிஸ்
சுபாங்ஜெயா:
எரிவாயு குழாய் தீ விபத்து சம்பவத்தில் 190 வீடுகள் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின் அவ்வீடுகளில் மக்கள் குடியேறினர்.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சுபாங் ஜெயாவில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 190 வீடுகள், பொறுப்பான தரப்பினரின் ஆய்வுகளில் பாதுகாப்பானவை என்று கண்டறியப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 487 பாதிக்கப்பட்ட வீடுகளை டிஎன்பி, ஆயர் சிலாங்கூர் பெர்ஹாட், தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, சுபாங் ஜெயா நகராண்மை கழகம், அந்தந்த நிறுவனங்கள் உள்ளிட்ட 12 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளன.
மொத்தத்தில் 328 வீடுகள் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டது. தற்போது 190 வீடுகளில் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 306 வீடுகளுக்கு டிஎன்பி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm