நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: பி.எஸ். எம் கட்சிக்கு ஆதரவாக உரிமை கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் 

கோலாலம்பூர்: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் பி.எஸ். எம் கட்சிக்கு ஆதரவாக இந்தியர் கட்சியான உரிமை கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் பி.இராமசாமி கூறினார் 

அம்னோ வேட்பாளருக்கு எதிராக அங்குள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை உரிமை கட்சி முன்னெடுக்கும் என்று டாக்டர் பி.இராமசாமி ஓர் அறிக்கையில் தெரிவித்தார் 

பி.எஸ். எம் கட்சிக்கு உரிமை கட்சி பிரச்சாரம் செய்வதால் நடப்பு அரசாங்கத்திற்கு உரிமை கட்சி தகவல் ஒன்றை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார் 

முன்னதாக, பி.எஸ்.எம் கட்சி சார்பாக கே.எஸ் பவானி ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, பி.எஸ்.எம் மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset