
செய்திகள் மலேசியா
கைது செய்யப்பட்டதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்: லம்போர்கினி ஓட்டுநர் மிரட்டல்
கோலாலம்பூர்:
சாலை போக்குவரத்து துறை அதிகாரிகளால் தாம் கைது செய்யப்பட்டதாக பொய்யான செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட லம்போர்கினி ஓட்டுநர் மிரட்டல் விடுத்துள்ளார்
இந்த விவகாரத்தில் தாம் கைது செய்யப்படவில்லை. மாறாக, ஜே.பி.ஜே துறை அதிகாரிகளால் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டதாக லம்போர்கினி கார் ஓட்டுநர் தெளிவுப்படுத்தினார்
பாதிக்கப்பட்ட சீன நாட்டவரான டெங் ஷெங், இந்த பொய்யான செய்தியால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதனால் என்னுடைய வாழ்க்கை, தொழில் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டதாக ஆதங்கம் பட்டுக்கொண்டார்
இதனால் தனக்கு எதிராக கைது எனும் பொய்யான செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக அந்நபர் மிரட்டல் விடுத்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm