
செய்திகள் மலேசியா
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்: போலிஸ்
மாரான்:
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
மாரான் மாவட்ட போலிஸ் தலைவர் வோங் கிம் வாய் இதனை தெரிவித்தார்.
நேற்று காலை பகாங் மாரான் அருகே உள்ள ஃபெல்டா ஜெங்கா 2 இல் நடந்த ஒரு சம்பவத்தில் கிராம மக்களால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒருவர் இறந்தார்.
57 வயதான அந்த ஆடவர் வன்முறையில் ஈடுபட்டு ஒரு பெண்ணையும் ஒரு சிறுவனையும் த்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
நேற்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் குறித்த போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கை சுங்கை ஜெரிக் போலிஸ் நிலையத்திற்கு காலை 10.15 மணிக்கு கிடைத்தது.
மேலும் அந்த நிலையத்தின் குற்றத் தடுப்பு ரோந்துப் பிரிவு புகாரைப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது அந்த நபர் மயக்கமடைந்து, இரு கண்களிலும் காயங்கள் இருந்தன.
அந்த ஆடவரின் கைகளும் கட்டப்பட்டிருந்தன என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm