
செய்திகள் மலேசியா
கோயில் பிரச்சனையும் பலூன் வியாபாரி தாக்கப்பட்ட விவகாரத்தையும் அரசியலாக்க வேண்டாம்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை
புத்ரா ஜெயா:
கோயில் பிரச்சனையையும் பலூன் வியாபாரியைத் தாக்கிய பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவிலுள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் நில விவகாரம் தொடர்பான பிரச்சனையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதனை அரசியாலக்க முயற்சி செய்வர்களையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
சில நேரங்களில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளையும் தகவல்களையும் உண்மையென கருதுவது தவறு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சிறிய விவகாரத்தைக் கூட சமூக ஊடகங்களில் பதிவிட்ட அதனை அரசியாலக்க சில தரப்பினர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.
உண்மையை அறிந்து பொது நலனை மதித்து இது போன்ற செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்று பிரதமர் துறையுடனான மாதாந்திர கூட்டத்தில் அன்வார் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm