செய்திகள் இந்தியா
பயணியின் நகையைத் திருடியதாக இண்டிகோ விமானப் பணிப்பெண்மீது புகார்
பெங்களூரு:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஐந்து வயதுச் சிறுமியிடமிருந்து 20 கிராம் தங்க நகையை விமானப் பணிப்பெண் திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா முகர்ஜி என்ற பெண், தனது இரு மகள்களுடன் சில நாள்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார்.
அந்த விமானத்தின் பணிப்பெண்ணான அதிதி அஷ்வினி சர்மா, பிரியங்காவின் மூத்த மகளைக் கழிவறைக்கு அழைத்துசென்றார்.
திரும்பிவந்த போது, அச் சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இந்நிலையில் அந்தப் பணிப்பெண் தன் குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடி விட்டதாக பிரியங்கா முகர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
“திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற விமானத்தில் ஒரு ஊழியர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் விசாரணைகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்,” என இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
