நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

IPL: பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது

அஹ்மதாபாத்:

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.

5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார் பிரப்சிம்ரன் சிங். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட வந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் பிரியான்ஷும் ஸ்ரேயாஸும்.

பிரியான்ஷ், 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அவர் விளாசினார். தொடர்ந்து பேட் செய்ய வந்த அஸ்மதுல்லா 16, மேக்ஸ்வெல் 0, ஸ்டாய்னிஸ் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

7ஆவது பேட்ஸ்மேனாக ஷஷாங் சிங் களத்துக்கு வந்தார். ஸ்ரேயாஸ் உடன் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தனர். ஸ்ரேயாஸ், 42 பந்துகளில் 97 ரன்களை விளாசினார். 5 பவுண்டரி, 9 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

ஷஷாங், 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

மொத்தமாக இந்த இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

குஜராத் அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் மட்டுமே 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர்.

244 என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரர்களாக சாய் சுதர்சன், ஷுப்மன் கில் இருவரும் பேட்டிங் செய்தனர். இதில் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 74 ரன்களை விளாசி அசத்தினார். எதிர்முனையில் ஆடிய கில், 33 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் அரை சதம் (54) விளாசி தெறிக்க விட்டார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 46 ரன்கள் எடுத்தார். இப்படியாக அசத்தலாக சென்று கொண்டிருந்த ஆட்டம், அடுத்து தடுமாறத் தொடங்கியது. ராகுல் 6, ஷாருக்கான் 6, அர்ஷத் கான் 1 என இலக்கை விரட்ட முடியாமல் 20 ஓவர்களில் 232 ரன்களுடன் சுருண்டது குஜராத் அணி.

பஞ்சாப் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset