நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சென்னை அணி ரசிகர்களைக் கவரத் தோனியைத் தவிர்த்து வேறு எந்த வீரரையும் உருவாக்கவில்லை: அம்பதி ராயுடு 

சென்னை:

சென்னை சூப்பர் கிங்ஸ், சிஎஸ்கே அணி ரசிகர்களைக் கவரத் தோனியைத் தவிர்த்து வேறு எந்த வீரரையும் உருவாக்கவில்லை என்று அவ்வணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். 

அதிலிருந்து மீண்டு வந்து ரசிகர்களை வேறு ஏதாவது வகையில் ஈர்ப்பதற்கு புதிய யுக்தியைச் சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தோனிக்கு மட்டும் ஆதரவு அளிக்கும் ரசிகர்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தான் ஆபத்து என அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். 

தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கிண்ணத்தை வென்றுள்ளது. 

இதனால் தோனிக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. 

தோனி மைதானத்தில் தோன்றினாலே ரசிகர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர். 

தோனியின் ஆட்டத்தைப் பார்க்க மட்டுமே சென்னை ரசிகர்கள் டிக்கெட் பெற்றுக் கொண்டு வரத் தொடங்கினர். 

மும்பைக்கு எதிரான சென்னை போட்டியில் சென்னை அணி வீரர் ரச்சின் ரவீந்திரா சிக்ஸ் அடித்து போட்டியை முடித்த போது, தோனி சிக்ஸ் அடிக்க ஸ்டிரைக் கொடுக்கவில்லை என ரசிகர்கள் ரவீந்திராவைத் திட்டி தீர்த்தனர்.

இது சிஎஸ்கே அணியில் களமிறங்கும் புதிய வீரருக்கு இது ஒரு புதிய பிரச்சனையாக இருக்கும்.

அவருக்காக மற்றவர்கள் அவுட்டாக வேண்டும் என நினைப்பது உண்மையில் ஆட்டத்திற்கு நல்லதல்ல. இதனால் சென்னை அணிக்கு தான் ஆபத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் பிரச்சனைக்குத் தோனியால் மட்டுமே தீர்வு காண முடியும். அவர் பொது வெளியில் வந்து, அவர்கள் அனைவரும் நமது வீரர்கள் எனவும், அவர்களுக்கும் பேட்டிங் செய்கிறார்கள் என ரசிகர்கள் கூட்டத்தை அமைதிப்படுத்த வேண்டும் என்று அம்பதி ராயுடு கேட்டுக் கொண்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset