நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா அபாரம்

போனஸ் அயர்ஸ்:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின்  தகுதி சுற்று ஆட்டத்தின் அர்ஜெண்டினா அணியினர் அபார வெற்றி பெற்றனர்.

மாஸ் மோனுமெந்தல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் பிரேசில் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜெண்டினா அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்ஜெண்டினா அணியின் வெற்றி கோல்களை ஜூலியன் அல்வாரெஸ், என்ஸோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், கியூலியானோ சிமியோன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் பொலிவியா அணியுடன் சமநிலை கண்டனர்.

பராகுவே அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியுடன் சமநிலை கண்டனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்ஜெண்டினா அணியினர் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset