
செய்திகள் விளையாட்டு
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
போனஸ் அயர்ஸ்:
தகாத வார்த்தை பேசிய இளம் பிரேசில் வீரர் ராபின்ஹாவிற்கு மூத்த அர்ஜெண்டினா வீரர் நிகோலஸ் ஒடமென்டி அறிவுரை வழங்கியுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் ராபின்ஹா அர்ஜெண்டினாவை வீழ்த்துவோம்.
மேலும் ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தினார்.
இது உலகம் முழுவதும் சர்ச்சையானதால் இந்தப் போட்டிக்கு மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா அணி பிரேசிலை 4-1 என வீழ்த்தி 2026 உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டி நடுவிலே அர்ஜெண்டினா, பிரேசில் வீரர்களுக்கு வாக்குவாதங்கள் நடைபெற்றன. இரு அணிகளுக்குமே தலா 5 மஞ்சள் அட்டைகள் கொடுக்கப்பட்டன.
இப்போட்டிக்கு பின் பேசிய நிகோலஸ் ஒடமென்டி ராபின்ஹாவை குறைவாக பேசச் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
மற்றுமொரு அர்ஜெண்டனா வீரர் ஜூலியன் அல்வராஸ் இது கிளாசிக்கான போட்டி. நாங்கள் இப்படித்தான் விளையாடுவோம்.
பிரேசில் வீரர்கள் போட்டிக்கு பரபரப்பை சேர்த்துவிட்டார்கள். அது தேவையற்றதென நினைக்கிறேன்.
ஆனால், நாங்கள் சிறப்பாக விளையாடினோம். தன்னடக்கத்துடன் அவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளோம் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am