நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார் 

சிங்கப்பூர்:

அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் அபாரத் திறன்களை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பு சிங்கப்பூர், இந்திய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அர்ஜெண்டினா கால்பந்துக் குழு சிங்கப்பூரில் நட்புமுறை ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் அர்ஜெண்டினா கால்பந்துக் குழு இந்தியாவில் நட்புமுறை ஆட்டத்தில் விளையாட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவலை எச்எஸ்பிசி வங்கியும் அர்ஜெண்டினா கால்பந்துச் சங்கமும்  இணைந்து வெளியிட்டன.

அர்ஜெண்டினாவுக்கும் எச்எஸ்பிசி வங்கிக்கும் இடையிலான ஓராண்டு பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்டங்கள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

ஆட்டத்தைக் காணவும் அதுதொடர்பாகவும் தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்காளிகளுக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று எச்எஸ்பிசி வங்கி கூறியது.

நுழைவுச்சீட்டுகள், காற்பந்து நட்சத்திரங்களுடனான சந்திப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

அர்ஜெண்டினா கால்பந்துக் குழு சிங்கப்பூரில் ஆகக் கடைசியாக 2017ஆம் ஆண்டில் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset