
செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
ரியாத்:
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம் என கூறப்படுகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் எதிர்காலம் இன்னும் தெளிவாகத் முடிவு செய்யவில்லை.
சவூதி அரேபிய கிளப்பான அல் நசருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க எந்த உடன்பாடும் இல்லை என்றும் talkSPORT தெரிவித்துள்ளது.
40 வயதான அவரது ஒப்பந்தம் காலாவதியாக உள்ளது
மேலும் அவர் அல் நசருடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்,
அவர் சவூதி அரேபியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு இந்த கோடையில் புதுப்பிக்கப்பட்ட கிளப்புகளுக்கான உலகக் கிண்ண போட்டியில் களமிறங்கும் அணியில் சேர வாய்ப்பு உள்ளது.
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரும் ஜூன் 15 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளது.
லியோனல் மெஸ்ஸி, அவரது அணியான இந்தர்மியாமி இந்த போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால் இந்த இரண்டு ஜாம்பவான்களும் இந்தப் போட்டியில் மீண்டும் சந்திப்பார்கள் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக இருவரும் சக வீரர்களாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில் ரொனால்டோவை மெஸ்ஸியுடன் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதில் இந்தர்மியாமி ஆர்வம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am