
செய்திகள் விளையாட்டு
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ், நூர் அஹ்மது அபாரம்: மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி
சென்னை:
நடப்பு ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சிஎஸ்கே.
சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் ஆட்டமிழந்தார்.
இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் மீண்டும் கலீல் பந்து வீச்சில் ரியான் ரிக்கல்டன் ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்திருந்தார். அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் வில் ஜேக்ஸ் அவுட் ஆனார். 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
அதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்தக் கூட்டணியை பிரித்தார் நூர் அஹ்மது. சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்திருந்தார் தோனி.
நூர் அஹ்மது வீசிய இன்னிங்ஸின் 13-வது ஓவரில் ராபின் மின்ஸ் மற்றும் திலக் வர்மாவை வெளியேற்றினார்.
அடுத்தடுத்த ஓவர்களில் நமன் 17 ரன்கள், சான்ட்னர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 128 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது மும்பை. போல்ட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தீபக் சஹார் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி.
அடுத்து 156 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனர்களான ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி துவக்கம் செய்தனர்.
இதில் ரச்சின் ரவீந்திரா கடைசி வரை அவுட் ஆகாமல் 65 ரன்கள் குவித்தார். ஆனால் மறுபக்கம் ஆடிய ராகுல் வெறும் இரண்டு ரன்களில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்கள் விளாசி அசத்தினார். ஷிவம் டூபே 9 ரன்கள், தீபக் ஹூடா 3, சாம் கர்ரன் 4, ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்திருந்தனர். அடுத்தபடியாக அரங்கம் அதிர தோனி களமிறங்கினாலும் ரன்கள் எதுவும் அவர் எடுக்கவில்லை.
6 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதியாக ஒரு சூப்பர் சிக்சரை அடித்து ஃபினிஷ் செய்தார் ரச்சின் ரவீந்திரா. இதன்படி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சிஎஸ்கே.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am