நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

விராட் கோலி, சால்ட் அசத்தல் அரைசதம்: ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி

கொல்கத்தா:

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 

பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 3 விக்கெட்கள் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியின் கோலி 59, பில் சால்ட் 56, கேப்டன் பட்டிதார் 34 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 (CSK, DC, KKR, PBKS) வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் கடந்த ஒரே வீரராக சாதனை படைத்தார் விராட் கோலி.

கோலி அணியில் இருப்பது எங்கள் அணியை வலுப்படுத்தும். அவர் போன்ற கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த வீரரிடம் இருந்து கற்றுக்கொள்ள எனக்கு இது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset