நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்

நியூயார்க்: 

பிக் ஜார்ஜ் என்று செல்லமாக அழைக்கப்படும் குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். அவருக்கு 76 வயது.

ஃபோர்மேன் வெள்ளிக்கிழமை இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகம்வழி தகவல் வெளியிட்டனர்.

ஃபோர்மேன் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்தார். 

முதலில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட அவர் பின்னர் குத்துச் சண்டையில் ஈடுபட்டு வாழ்க்கையை மாற்றினார்.

1968ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் ஃபோர்மேன். அவர் இரண்டு முறை ஹெவி வெயிட் பட்டத்தை வென்று சாதித்தவர்.

அவரது முதல் பட்டத்திற்கு இரண்டாம் பட்டத்திற்கும் 21 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. 

45ஆவது வயதில் ஹெவி வெயிட் பட்டத்தை வென்று ஆக வயதான வெற்றியாளர் என வரலாற்றைப் படைத்தார் ஃபோர்மேன்.

தனது முதல் ஹெவி வெயிட் பட்டத்தை 1974ஆம் ஆண்டு முஹம்மது அலியிடம் இழந்தார் ஃபோர்மேன். 

அந்த ஆட்டம் குத்துச் சண்டை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset