நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 உலக கிண்ண காற்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நாடு ஜப்பான் 

தோக்கியோ: 

ஜப்பான் நாடு 2026 உலக கிண்ண காற்பந்து போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் நாடாகும் 

உலக கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான், பஹ்ரைன் அணியை 2 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 உலக கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றது 

பயிற்றுநர் ஹஜிமே மொரியாசு தலைமையிலான ஜப்பான் அணி, கடந்த 2022 உலக கிண்ண காற்பந்து போட்டியில் சுற்று 16 வரை முன்னேறியது. 

ஐரோப்பிய அணிகளுக்கான உலக கிண்ண தகுதி சுற்று ஆட்டங்கள் இவ்வாரம் தொடங்கும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது 

2026 உலக கிண்ண காற்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக ஏற்று நடத்துகின்றன 

ஜப்பான் அணி உலக கிண்ண காற்பந்து போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில் ஆசிய காற்பந்து சம்மேளனம் AFC வாழ்த்து தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset