
செய்திகள் விளையாட்டு
2035 ஃபிஃபா மகளிர் உலகக் கிண்ண போட்டியை ஏற்று நடத்த இங்கிலாந்தின் வரலாற்று முயற்சி
லண்டன்:
2035 மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடத்த இங்கிலாந்தின் ஆர்வம் காட்டியுள்ளது.
2035 ஆம் ஆண்டு ஃபிஃபா மகளிர் உலகக் கின்ண கால்பந்து போட்டியை நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை நனவாக்க இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகியவை ஒன்றிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஃபிஃபா உலகக் கிண்ண போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான செயல்முறை, ஃபிஃபா நிர்ணயித்துள்ள காலக்கெடுவின்படி ஆரம்ப ஆர்வத்தை வெளிப்படுத்தும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் தொடங்குகிறது.
ஆர்வமுள்ள நாடுகள் நவம்பர் மாதத்திற்குள் விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் உள்ளது.
2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் இந்த லட்சிய முயற்சிக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கால்பந்து நமது தேசிய அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am