நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

மாட்ரிட்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில்  மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.

ரியால் அரேனா அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் முதல் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ரியால் சோஷிடாட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியுடன் சமநிலை கண்டனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் கோலை ஜோஸ்வா ஷுர்க் ஷி அடித்த வேளையில் ரியால் சோஷிடாட் அணியின் கோலை மிகேல் ஒசார்ஷபேல் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் அல்க்மார் அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் லஷியோ, ஏஎஸ் ரோமா, ரேஞ்சர்ஸ் உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset