
செய்திகள் விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி: ரச்சின் ரவிந்தரா, கேன் வில்லியம்சன் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதமடித்து சதமடித்து அசத்தினர்.
2-ஆவது விக்கெட்டுக்கு ரவீந்திரா-வில்லியம்சன் ஜோடி 164 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
கேப்டன் பவுமா 56 ரன்னும், வான் டெர் டுசன் 69 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
துபாயில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மோதுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am