நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்ஸ் டிராபி’ இறுதிக்கு முன்னேற்றம்

துபாய்: 

துபாயில் நடைபெற்ற நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளில் வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா.

ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இணைந்து இன்னிங்ஸை துவக்கம் செய்தனர். 

கில், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸாம்பா பந்தில் அவர் போல்ட் ஆனார். அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்தார்.
 
கே.எல்.ராகுல் விரைந்து ரன் குவித்தார். கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் மூலம் சதம் விளாசும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். 

ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மூன்று சிக்ஸர்களை அவர் விளாசி ஆட்டத்தில் அழுத்தத்தை குறைத்தார். 48.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. 

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நியூஸிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்காவை இறுதி ஆட்டத்தில் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset