நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜெர்மன் பேட்மின்ட்டன் பொதுவிருதுப் போட்டி: சிங்கப்பூரின்  இயோ ஜியா மின் வாகை சூடினார் 

பெர்லின்:

சிங்கப்பூரின் பேட்மின்ட்டன் வீராங்கனை இயோ ஜியா மின் (Yeo Jia Min) ஜெர்மன் பேட்மின்ட்டன் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், இயோ ஜியா மின் வியட்நாமின் குயேன் துயி லின்னை (Nguyen Thuy Linh) வீழ்த்தினார்.

செட் விவரம்: 21-16, 21-17

"போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் தினமும் சிறப்பாக விளையாடவேண்டும். என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். எனது பயிற்றுவிப்பாளருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்," என்றார் இயோ.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், லோ கியென் யூ டென்மார்க்கின் டேன் விக்டர் அக்சல்சனிடம் (Dane Viktor Axelsen) தோல்வியுற்றார்.

செட் விவரம்: 21-19, 21-18

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset