
செய்திகள் விளையாட்டு
தங்கள் அணி தோற்றாலும் கவலையில்லை - விராட் கோலி சதத்தை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்கள்
இஸ்லாமாபாத்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி தனது 51 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
விராட் கோலியின் சதத்தை இந்திய ரசிகர்கள் ஒரு பண்டிகை போல் கொண்டாடி வருகின்றனர். ஆனால் விராட் கோலியின் இந்த ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடி வருவதுதான் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது.
ஆம், விராட் கோலிக்கு இந்தியாவில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு பாகிஸ்தானிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். நேற்றைய துபாய் மைதானத்தில் கூட பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து வந்த ரசிகர்கள், அதில் விராட் கோலியின் பெயரை போட்டு இருந்தார்கள்.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் இந்தியா மோதும் ஆட்டத்தை பார்க்க பாகிஸ்தான் முழுவதும் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதில், பாகிஸ்தான் தோல்வியை தழுவினாலும் விராட் கோலி சதம் அடித்து இருந்ததை அந்நாட்டு ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினார்கள்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலி ஆட்டத்தை பார்த்து கொண்டாடியதும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து விராட் கோலி பார்ம்க்கு திரும்பியதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ரசிகர்கள் பலரும், இந்தியா பாகிஸ்தான் என பிரிந்திருக்கும் இரண்டு நாட்டை விராட் கோலி என ஒரு மனிதர் இணைத்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு எப்போதுமே இரு நாடுகளுக்கு ஒரு நல்ல பாலமாக தான் இருக்க வேண்டுமே, தவிர பிரிவை ஏற்படுத்தி விடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணி சென்னையில் வெற்றி பெற்றதை நம் தமிழக ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி உலகத்திற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களும் இந்திய வீரர் ஒருவருக்கு ஆதரவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am