நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து லீக் வரலாற்றில் புதியதொரு சாதனை புரிந்த லியோனல் மெஸ்ஸி

நியூயார்க்:

அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்எஸ் கால்பந்து லீக்கில் விளையாடி வரும் அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி புதியதொரு வரலாற்றைப் படைத்துள்ளார். 

கால்ப்ந்து லீக் வரலாற்றில் வேகமாக 40 கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.

மேஜர் லீக் தொடரில் இந்தர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார் லியோனல் மெஸ்ஸி. 

இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தர் மியாமி அணி தோல்வியிலிருந்து தப்பிக்க லியோனல் மெஸ்ஸி மீண்டும் ஒரு முக்கிய பங்காற்றினார். 

நியூயார்க் சிட்டி எஃப்சி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மியாமி தனது சீசனை 2-2 என்ற சமநிலையுடன் தொடங்கியது.

மெஸ்ஸி தனது சிறந்த ஆட்டத்தை மேலும் நியூயார்க் சிட்டி எஃப்சிக்கு எதிரான இரண்டு கோல்களை அடித்தார். 

37 வயதான அவர் இறுதி வரை தனது அணிக்காக கடுமையாகப் போராட்டத்தை வெளிப்படுத்தி, மியாமி சமநிலை செய்ய முக்கிய பங்காற்றினார்.

இந்த கோல் மூலம் புதியதொரு வரலாற்றைப் படைத்தார். 

அதாவது கால்பந்து லீக் வரலாற்றில் விரைவாக 40 கோல்கள் அடித்த வீரர் ஆனார். 

அர்ஜெண்டினா ஜாம்பவான் வீரரான மெஸ்ஸி, 26 போட்டிகளில் 40 கோல்கள் என்ற இலக்கை எட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset