நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை 11ஆவது முறையாக வென்றது ஜேடிதி

இஸ்கண்டார் புத்ரி:

மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை 11ஆவது முறையாக ஜேடிதி அணியினர் வென்றுள்ளனர்.

சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் பேரா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பேரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜேடிதி அணியின் வெற்றி கோல்களை ஜேஸ், ஓப்ராகோன் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜேடிதி அணியினர் 58 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினர்.

இன்னும் ஒரு சில ஆட்டங்களே எஞ்சியிருக்கும் வேளையில் சூப்பர் லீக் கிண்ணம் ஜேடிதி அணிக்கு சொந்தமாகி உள்ளது.

புள்ளிப் பட்டியலில் சிலாங்கூர் அணியினர்  42 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset