
செய்திகள் மலேசியா
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களுக்கு எச்சரிக்கை மணி: குணராஜ்
கிள்ளான்:
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களுக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை மணியை தொடர்ந்து சமுதாய மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வலியுறுத்தினார்.
கிள்ளான் ராஜா மஹாடி இடைநிலைப் பள்ளியில் தமிழ், தமிழ் இலக்கிய பாட நேரம் மாற்றப்பட்டது பெரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவாகரத்திற்குச் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளி நிர்வாகத்தை சந்தித்தேன்.
அப்போது இந்த பள்ளியில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஆசிரியர்கள் என்னிடம் கூறினர்.
அந்த எண்ணிக்கை எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிள்ளான் வட்டாரத்தில் அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப் பள்ளியாக ராஜா மஹாடி விளங்குகிறது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நூறு அல்லது அதற்கு குறைவான மாணவர்கள் மட்டுமே தமிழ் மொழி, தமிழ் இலக்கிய பாடங்களை பயில்கின்றனர்.
இந்நிலை நீடித்தால் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களைப் பயில மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போய்விடும்.
இதனால் இந்த படங்களை அகற்றி விடலாம் என்ற கோரிக்கைகளும் எழலாம்.
வரும் காலங்களில் இடைநிலைப் பள்ளிகளில் இந்த இரு பாடங்களையும் நீக்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆகவே, இடைநிலை பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக தமிழ் பள்ளிகளில் இருந்து செல்ல மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழியை பாடமாக தேர்வு செய்ய வேண்டும். இதனைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குணராஜ் வலியுறுத்தினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am