
செய்திகள் விளையாட்டு
கோல்ப்ஃ உதவியாளர் பயிற்சித் திட்டம் தொழில் திறனை மேம்படுத்தும்
கோலாலம்பூர்:
AMS Caddy Academy, மலேசியா கோல்ஃப் சங்கம் (MGA), மலேசியா இந்தியா திறன் மேம்பாட்டு இயக்கம் (MiSI) இணைந்து இந்திய சமூகத்திற்கான சிறப்பு தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி, உள்ளூர் பணியாளர்களின் வேலை வாய்ப்பு திறனை உயர்த்தவும், மலேசியாவில் கோல்ஃப் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலாக்கா ஆஃபாமோசா ரிசார்ட்டில் நடைபெற்ற திறப்பு விழாவில், மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சண்முகம், MiSI, MGA, AMS Caddy Academy ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டணி வெறும் கோல்ஃப் சார்ந்த தொழிற்பயிற்சி வழங்குவதற்கு மட்டுமல்ல, நிலையான வேலைவாய்ப்புகளையும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகமான வருமான வாய்ப்புகளையும் உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“இந்த திட்டம் கோல்ஃப் உதவி பணியாளர் பயிற்சிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கவில்லை; மாறாக பங்கேற்கும் அனைவரின் எதிர்கால நலனையும் உறுதி செய்கிறது என AMS Caddy Academy நிறுவனர் Low Hock Lai தெரிவித்தார்.
இந்த முயற்சி மனிதவள அமைச்சகம் (KESUMA) மூலம் முழுமையான அரசின் ஆதரவை பெற்றுள்ளது. டத்தோ ஷண்முகம், இந்த திட்டம் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நிலையான வேலைவாய்ப்புகளை வழங்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார்.
“இந்த பயிற்சி, கோல்ஃப் உதவியாளர் தொழிலை ஒரு தொழில்முறை துறையாக உருவாக்குவதற்கும், இந்திய இளைஞர்களுக்கு உயர் தரமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் முக்கியமான ஒரு முயற்சியாகும். மலாக்காவிலும், நாடெங்கும் உள்ள இந்திய இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து, நீண்ட கால தொழில்திறன் வளர்ச்சி பெற வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார்.
AMS Caddy Academy, 2029க்குள் 2,300 கோல்ஃப் உதவியாளர்களுக்கான நுணுக்கத்தை பயிற்றுவித்து பணியமர்த்தும் இலக்கை கொண்டுள்ளது.
இந்த முயற்சி, உள்ளூர் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும், வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கும், மலேசியாவில் கோல்ஃப் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தவும் அரசின் இலக்குடன் இணைந்து செயல்படுகிறது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am