நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை பெற்றனர்.

கோட்டிசன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியுடன் சமநிலை கண்டனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் டோட்டன்ஹாம், பிரிக்டோன், கிறிஸ்டல் பேலஸ், வோல்வேர்ஹாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset