நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மத்தியப் பிரதேசம், கோவா மாநிலங்களில் ‘Chhaava’ படத்துக்கு வரி விலக்கு

மும்பை:

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்திப் படம், 'ஜாவா'.

சாம்பாஜி மகாராஜாவின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கவுசல், அவர் மனைவியாக ராஷ்மிகா மந்தனா, அவுரங்கசீப்பாக அக்‌ஷய் கன்னா உட்பட பலர் நடித்துள்ளனர்.

லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

பிப்.14-ஆம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்று வசூல் குவித்து வருகிறது. 

கடந்த 7 நாட்களில் இந்தப் படம் ரூ.270 கோடியை வசூலித்துள்ளது. 

இந்தப் படத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கோவா மாநிலத்திலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset