நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளையன் எம்பாப்பேவால் ரொனால்டோவின்  சாதனைக்கு வந்த ஆபத்து 

மாட்ரிட்:

ரியல்மாட்ரிட், மென்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் எப்படிப்பட்ட ஒரு வீரர் என மீண்டும் நிரூபித்து இருக்கின்றார் கிளையன் எம்பாப்பே. 

கடந்த சில மாதங்களாக எம்பாப்பே மீது ஒரு சில விமர்சனங்கள் வைக்கப்பட்டது. 

அவரின் ஆட்டம் முன்பு போல சிறப்பாக இல்லை என்றெல்லாம் சிலர் விமர்சித்தார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சமீபகாலமாக அவரின் ஆட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் கிளையன் எம்பாப்பே.

இதன் மூலம் தன் தனிப்பட்ட கேரியரிலும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டினார் எம்பாப்பே.

தற்போது எம்பாப்பே இதுவரை 500 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு தற்போது 26 வயது தான் ஆகின்றது.

இந்த இளம் வயதில் ஐநூறு கோல்களை எட்டிய ஒரே வீரர் என்ற பெருமையை எம்பாப்பே பெற்றுள்ளார். 

இப்படியே போனால் கண்டிப்பாக எம்பாப்பே கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. 

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு தற்போது 39 வயதாகிறது. அவர் இதுவரை 900 கோல்களை அடித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset