நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் முன்னேற்றம்

முனிச்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் சுற்று 16க்கு  பாயர்ன் முனிச் அணியினர் முன்னேற்ற உள்ளனர்.

அலையன்ஸ் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் கெல்திக் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெல்திக் அணியுடன் சமநிலை கண்டனர்.

இருந்தாலும் இரு ஆட்டங்களின் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பாயர்ன் முனிச் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் பென்பிகா அணியினர் 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் ஏஎஸ் மொனாக்கோ அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்ற புருகே கிளப், ஃபெயனூர்டு ரோட்டர்டாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset