நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவிற்கான புதிய மலேசியத் தூதர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: பிரதமர் அன்வார்

சுபாங்: 

நஸ்ரி அஜீஸுக்குப் பதிலாக அமெரிக்காவிற்கான புதிய மலேசியத் தூதரை நியமனம் செய்வதற்கான வேட்பாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுக்குப் பின் இது குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இறைவன் நாடினால் தாம் பஹ்ரைனுக்கு மாமன்னரைக் காண செல்லும் போது ​​அவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்றார்.

வாஷிங்டன் டிசியில் இரண்டு வருட சேவைக்குப் பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதியுடன் நஸ்ரியின் ஒப்பந்தம் நிறைவடைந்தது. 

நஸ்ரி 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராகத் தம் பணியைத் தொடங்கினார். 

பிப்ரவரி 7-ஆம் தேதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் ஐந்து நபர்களை புதிய தூதராகக் கருதுமாறு பரிந்துரைத்தார். 

ஓங் கியான் மிங் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ், நூருல் இஸா அன்வார், யுஸ்மாடி யூசோஃப், நசீர் ரசாக் ஃபைஸ் அப்துல்லா ஆகியோரின் பெயர்களைப் பரிந்துரை செய்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset