![image](https://imgs.nambikkai.com.my/bolt.jpg)
செய்திகள் மலேசியா
பக்தர்களின் வசதிக்காக பிரதான ஆற்றங்கரையில் அருகில் உள்ள KTM ரயில் பாதைகள் திறக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
பத்துமலை:
பக்தர்களின் வசதிக்காக பிரதான ஆற்றங்கரையில் அருகில் உள்ள கேடிஎம் ரயில் பாதைகள் திறக்கப்பட வேண்டும்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்கவலர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
பத்துமலை தைப்பூச விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற்று முடிய ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றி.
அதே வேளையில் பத்துமலை தைப்பூச விழாவில் இன்னும் மாறாத விஷயமாக உள்ளது குப்பைகள்தான்.
பல இயக்கங்கள் குப்பைகளை சுத்தம் செய்தாலும் குப்பைகளை வீசும் கலாச்சாரத்தில் இருந்து மக்கள் மாறவில்லை. சுத்தம் செய்ய செய்ய குப்பைகளை வீசிக் கொண்டு தான் உள்ளனர்.
மக்களே மனது வைத்தால் தான் இந்த குப்பை பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
இந்நிலையில் இவ்வாண்டு தைப்பூச விழாவில் இரண்டாவது ஆற்றங்கரையில் இருந்து பத்துமலைக்கு வரும் கேடிஎம் சாலை மூடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பக்தர்களின் வசதிக்காக இப் பாதையை திறப்பது நல்ல விஷயம் தான்.
அதே போன்று பிரதான ஆற்றங்கரையில் அருகில் உள்ள கேடிஎம் ரயில் பாதைகள் திறக்கப்பட வேண்டும்.
அடுத்தாண்டு இது குறித்து கேடிஎம் நிர்வாகத்துடன் தேவஸ்தானம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 15, 2025, 10:12 pm
சோளம் விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 15, 2025, 9:11 pm
மன்னித்து விடுங்கள்; இந்த சோளம் இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை: வைரலாகும் வீடியோ பதிவு
February 15, 2025, 9:10 pm
நீலாய் சுற்றுவட்டாரத்தில் 500 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
February 15, 2025, 9:06 pm
மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 245 தோட்ட பாட்டாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டப்படும்: பிரதமர் அன்வார்
February 15, 2025, 7:23 pm