நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 இந்தியர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியம் கிடைக்க உதவிய டத்தோஸ்ரீ ரமணனுக்கு  நேசா தலைவர் டத்தோ சசிகுமார் நன்றி

கோலாலம்பூர்: 

ஆறு இந்தியர்  கூட்டுறவு நிறுவனங்களுக்கு  மானியம் கிடைக்க பேருதவி புரிந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனுக்கு நன்றி.

நேசா கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் டத்தோ பி. சசிகுமார் இதனை தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 6 இந்தியர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது. குறிப்பாக நேசாவிற்கு 30,000 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது.

மலேசிய வரலாற்றில் இந்தியர் கூட்டுறவு கழகங்களுக்கு இதுபோன்ற மானியம் வழங்கப்படுவது முதல் முறையாகும்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சராக பதவி ஏற்றது முதல் டத்தோஸ்ரீ இரமணன் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் சேவைகளை வழங்கி வருகிறார்.

இந்த நாட்டில் இந்தியர் கூட்டுறவு கழகங்கள் வெற்றி நடை போட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மலேசிய இந்தியர் கூட்டுறவு மாநாட்டையும் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக நடத்தினார்.

மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் மூலம் மானியம் பெறுவதற்கு இந்தியர் கூட்டுறவு கழகங்கள் முன் வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வாய்ப்பை இந்தியர் கூட்டுறவு கழகங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று டத்தோ சசிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset