நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆங்கிலப் போட்டிக்காக அமெரிக்க செல்ல மக்களின் உதவியை  நாடுகிறார் மாணவி ஷாஷினி

செராஸ்:

ஆங்கிலப் போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்க செல்ல மாணவி ஷாஷினி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

செத்திய ஆலம் தேசிய பள்ளியைச் சேர்ந்த மாணவி ஷாஷினி அனைத்துலக ஆங்கிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இப் போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து அவர் கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் இப்போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு 17 ஆயிரம் ரிங்கிட் தேவைப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் பொதுமக்களின் உதவியை நாடுகிறோம் என்று ஷாஷினியின் தாயார் மாலதி கூறினார்.

தனித்து வாழும் தாயான என்னிடம் இவ்வளவு பெரிய தொகை இல்லை.

ஆனால் இப்போட்டியில் அவர் நிச்சயம் தங்கப்பத்தக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆகவே ஷாஷினிக்கு உதவ பொதுமக்கள் முன்வர வேண்டும் என தாயார் மாலதி கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset