நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

ஒப்புதல் பெறப்பட்டவுடன் செயல்திட்டங்களைத் தாமதாக முன்னெடுப்பதில் தனது உடன்பாடில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காரணம் இது கூடுதல் செலவுகளை ஏற்படுத்த கூடும் என்று அவர் குறிப்பிட்டார். 

வீடமைப்பு திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் ஏற்படாமல் இருப்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

இது கட்டுமானத்தின் ஒட்டுமொத்த செலவைப் பாதிக்கும் .

உதாரணமாக, வீடமைப்பு திட்டத்திற்கு 77 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து 10 மில்லியன் காணாமல் போகின்றது. 

எனவே, இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை வீடமைப்பு மற்றும் ஊரட்சித் துறை அமைச்சகம் கண்கானிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset