
செய்திகள் சிந்தனைகள்
உச்சம் தொட்டவர்கள் வீழ்ச்சி காண்பர் - வெள்ளிச் சிந்தனை
நபி (ஸல்) அவர்களிடம் `அள்பா’ என்றோர் ஒட்டகம் இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு விரைவாக ஓடும்.
ஒரு பயணத்தில் கிராமவாசி ஒருவர் தமது வாட்ட சாட்டமான ஒட்டகத்தில் வந்து நபிகளாரின் ஒட்டகத்தை முந்திச் சென்றார்.
இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. "அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது'' என்று கூறத்தொடங்கினர்.
இதை அறிந்த நபிகளார், "உலகில் உயர்ந்துவிடுகின்ற எந்தப் பொருளாயினும் நிச்சயம் ஒருநாள் அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்'' என்றார்கள். (புகாரி)
இந்த பூமிப் பந்தை இஸ்லாம் பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்தது. நாகரிகத்தையும் கண்ணியத்தையும் நிலமெங்கும் பரவச் செய்தது. நீதிமிக்க ஆட்சியையும் மனித நேயத்தையும் மானிட வர்க்கத்துக்குக் கற்றுக்கொடுத்தது.
ஆயினும் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டன. புறக்கணிக்கப்பட்டன. சொந்த வரலாறு தெரியாமல் பின்தங்கிய சமுதாயமாக முஸ்லிம்கள் மாறினர். உச்சம் தொட்டவர்கள் வீழ்ச்சி கண்டனர்.
முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் யாரிடம் முறையிடுவது? யாரை சந்தித்துப் பேசுவது? தெரியாது. அநாதையைப் போன்று கிடக்கும் ஒரு சொத்துதான் முஸ்லிம்களின் உரிமையும் உயிர்களும்.
இன்று… காலம் அவர்கள் கரங்களில் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது. ஆட்டம் போடுகிறார்கள். தேசத்தை ஆளும் இந்த பொய்யின் ஆதிக்கம் நிலைத்திருக்குமா?
இல்லை! நிச்சயம் இல்லை! அல்லாஹ் மீது ஆணை! நிச்சயம் இது நீடிக்காது!!
இன்று நாம் காணும் இந்தப் பொய் அதன் உச்சத்தை எட்டுவது; அதன் உடனடி அழிவின் நற்செய்தியைத் தவிர வேறில்லை.
இரவின் இருண்ட மணித்துளிகள் விடியற்காலையின் சிறுது நேரத்திற்கு முந்தியவையே.
உச்சத்தைத் தொடும் எதுவாக இருந்தாலும் அதைக் கீழே கொண்டு வருவது அல்லாஹ்வின் நியதி.
நினைவில் வையுங்கள்! ஒருபோதும் வெல்ல முடியாது என்று கருதப்பட்ட நபிகளாரின் அள்பா ஒட்டகமே பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அள்பா வெறும் ஒரு மிருகம். அந்த மிருகத்தையே பின்னுக்குத் தள்ளிய இறைவன்...
உச்சம் தொட்டு நிற்கும் இந்த ஆணவம், அதிகாரத் திமிர், பொய், புரட்டு, அநீதிமிக்க ஆட்சி ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளமாட்டானா என்ன?
நிச்சயம் அது நடக்கும்!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am
சிலர் கரத்தால் உதவுகிறார்கள்; இன்னும் சிலர் கருத்தால் உதவுகிறார்கள் - வெள்ளிச் சிந்தனை.
January 31, 2025, 8:19 am
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் போராடுவதாகுமா?
January 24, 2025, 7:22 am
இளைத்தல் இகழ்ச்சி - வெள்ளிச் சிந்தனை
January 10, 2025, 8:40 am