நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி

கொச்சி: 

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த  கணவரை அவரது மனைவி காப்பாற்றியுள்ளார்.

பிரவம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷன் மரத்தில் மிளகு பறித்துக் கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் கிளை முறிந்து கிணற்றில் விழுந்தார்.

கணவர் கிணற்றுக்குள் விழுந்ததைப் பார்த்த அவரது மனைவி பத்மம் கயிற்றைப் பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளார்.

கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில் சுயநினைவை இழந்துள்ளார்.

கணவர் நீரில் மூழ்காமல் பத்மம் தாங்கி பிடித்து கொண்டிருந்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தம்பதியை மீட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset