நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம் 

கோலாலம்பூர்: 

நடிகர் அஜித்குமாரின் 62ஆவது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படம் இன்று பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது 

நடிகர் அஜித்குமார்- இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. இந்த படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, மற்றும் பலர் நடித்துள்ளனர். 

பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம், இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ளது 

இதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வமுடன் படம் பார்த்து வருகின்றனர். உலகம் முழுவதும் 2 காட்சிகளில் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்படுகிறது 

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மலேசியாவில் விடாமுயற்சி திரைப்படத்தை 3 DOT MOVIES நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset