நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு நியூகாஸ்டல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

எஸ்டி ஜேம்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இரு ஆட்டங்களில் முடிவில் 4-0 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூகாஸ்டல் அணியினர் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

அர்செனல் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset