
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தைப்பூசம், தொடர் விடுமுறை: 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை
சென்னை:
தைப்பூசம், தொடர் விடுமுறையையொட்டி, 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை (பிப்.7), பிப்.8, 9 தேதிகளில் வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் வருவதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு பிப்.7,8 தேதிகளில் 910 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கத்தை அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வார இறுதி நாட்களில் பயணிக்க 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm