
செய்திகள் இந்தியா
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: இன்று காலை வாக்குப்பதிவு துவங்குகிறது
புது டெல்லி:
தலைநகர் டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட தேசியத் தலைவர்கள் பலர் இங்கு கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm